Thursday, August 27, 2009

நீண்ட நாட்களுக்குப்பிறகு

கிட்டத்தட்ட கை விட்ட நிலையில் இந்த குழந்தை...
எதன் பொருட்டு ஆரம்பமும், முடிவும் தெரியாத நிலை. என்ன காரணம்? நீண்ட யோசனை. சில தகுதி அடிப்படைகளை கொண்டு யோசித்தால், நிச்சயமாக முடியவே முடியாது.
ஆனாலும் மீண்டும் தொடர இந்த குழந்தை தீராத ஆவல் கொண்டுள்ளது.
கொஞ்சம் மாற்றங்களுடன். ஆம். தனது ஓவியங்கள் முலமாக...
செய்திகளின் அடிப்படையிலேயே அமைந்த ஓவியங்கள்...
மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

Read more...

Tuesday, December 23, 2008

நாளம், நாளம் திருநாளம்...

ஒரு நாளைப்போலவே இன்னொரு நாளும் இருப்பதாகவே எண்ணுகிறீர்களா? அவர் ஒரு சோம்பல் பிரியர் என்று சொல்லலாம். கோடிக்கணக்கான உடல் உயிர்கள் நொடிக்கு நொடி, புத்தம் புதிதாக தோன்றிக்கொண்டே இருக்கின்றன நம் உடலில். ஆம், நமது மூலையில் கூடத்தான். ஓசோ சொன்னதுபோல ஒருவன் ஒரே ஆற்றில் இரண்டு முறை நீராட முடியாது. ஆனால் சிலர் அப்படியில்லை. அவர்களுக்கு எல்லாம் ஒரே நாள்தான். அதற்க்காகவே சில முறைகளும் கொண்டுள்ளனர். அவற்றில் ஓன்று, இந்த வலையும் கூட. ஒரு புதிய மாற்றத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. காலம் அவர்களுக்கு உதவி புரியும்.

Read more...

Saturday, December 20, 2008

நிரந்தரமா?

உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது மனித வாழ்வில் மறுக்கமுடியாத உண்மை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வுகளே. ஒரு விதை செடியாவதுபோல, ஒரு மொட்டு மலராவதைப்போல. நானும் கூட . ஆனால் மீண்டும் குழந்தையாகவே வருவது என்பது அபூர்வம். சுழன்று அடித்த பொருளாதார புயல் இந்த குழந்தையை ஒரு வலி (வழி ) பண்ணிவிட்டது. பறித்ததும், விடுத்தும் போக மிச்சமிருப்பது நினைவுகள்தான். சரிதான், யாருக்குத்தான் இதுமாதிரி எல்லாம் நடக்காமலிருக்கும்? கிட்டதட்ட ஏழு மாதம். கடவுச் சொல் கூட மறந்து போகிற நிலைமை. அய்யகோ.
சரி நலம் தானே...
இனி குழந்தை மீண்டும் எழுத (கதற ) போகிறது..
நலமுடன்...

Read more...

Thursday, April 10, 2008

English_ ஐ வித் மை பேட் இங்கிலீஷ்

ஆங்கிலம் பொருளாதார வாழ்வுக்கு தேவையானதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஆங்கிலம் ஒரு மொழிதான். அறிவு தொடர்பான விஷயம் அல்ல. ஆங்கிலம் தோன்றா முன்பே, அதுவே இல்லாமலும் நம்மவர்கள் இலக்கியம் என்ன வரலாறே படைக்க முடிந்திருக்கிறது. இன்னமும் முடியும்.

எனக்கே கொஞ்சநாள் முன்பு கூட, ஆங்கிலத்தில் யோசித்தால் எனக்கு முளையே கிடையாதோ என்றெல்லாம் எண்ணம் வரும். அவசியம் இல்லை.

தொடர்பு மொழிக்குத்தான் ஆங்கிலமே தவிர வேறேதுக்கும் அல்ல.

நான் பார்க்கும் ஒரு சிலருக்கு கோபம் வந்தால் ஆங்கிலதில்தான் வரும். பேச தவிர்க்கும் ஒரு சிலர் ஆங்கிலதில்தான் பதில் சொல்லுவார்கள். இருவருக்கும் இடையிலான வித்தியாசங்கள் கூட ஆங்கிலத்தால் அளக்கப்படுகின்றன.

இந்தமாதிரி எல்லாம் அதை கட்டி அழுக வேண்டியதில்லை.

"English is a language, not a knowledge"

"பால் டாக்" (Paltalk) என்று ஒரு சாட் வலை மனை உள்ளது. அதில் education>learning different languages>I with my bad English என்ற ஒரு அறை உள்ளது. உலகின் எல்லா மனிதர்களும், கொரியா, சீனா, பெல்ஜயம், இத்தாலி, போன்ற நாடுகளின் இளைஞர்களும் , என் ஆங்கிலமும் மோசமாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். இதில் வருத்தப்படவோ, வேதனைபடவோ என்ன இருக்கிறது. பழகினால் எல்லாம் பழகிவிடும்.

நீச்சல் அடிப்பது எப்படி என்று நூலில் படித்தல் போதுமா? என்று என் துறை தலைவர் என்னிடம் கேட்டார்.

பேசி பழகுங்கள். தன்னம்பிக்கையோடு. முகமறியா நண்பர்களோடு பேசி நட்போடு ஆங்கிலத்தையும் வளருங்கள்.

வலை இன்னொரு பிரபஞ்சம். உங்களுக்கான எல்லாம் கிடைக்கும்.

Read more...

Sunday, April 6, 2008

Rootless Youth

இந்தியாவின் உரம் ௨0% முத்த குடிமகன்களின் கையில் உள்ளது. உயிரோ 6o% இளைஞர்களின் கையில். அவர்களுக்கு தேவையான வாழ்க்கை அனுபவ செய்திகள் தனது அனுபவங்களாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நெருப்பு சுடும் என்று சொன்னால், நாங்கள் தொட்டு பார்த்து தெரிந்து கொள்வோம் என்று சூடு படுகின்றனர். அதும் நல்லதுதான். அனுபவசூடு ஆயுளும் மறக்காது. ஆனால் ஒவ்வொரு செய்தியிலுமே அனுபவ அறிவை கேட்டு பார்த்தே அறிந்து கொள்ளலாம் என்ற சுலபமான வழி இருக்கிறதே.

ஆனால் இப்போது விஷயம் அது அல்ல. சொல்லாமலே புரிந்து கொள்ளும் நுண்ணிய திறன் இப்போதுள்ள இளையர்களுக்கு நிறைய உள்ளது. கொஞ்சம் விழிப்பின்றி உள்ளனர் அவ்வளவுதான்.

இங்கே நான் அறிவுரை கூறும் அளவுக்கு பெரியவனல்லன்.

ஒரு இளம் அறிவியல், இளம் கலை மாணவ, மாணவியர் தமிழ் மட்டுமே படித்து பழகி ஆங்கிலமே படிக்கவோ, பேசவோ இயலாதிருக்கிரார்கள்.

ஹிந்தி ஒழிக, ஆங்கிலம் ஒழிக என்ற கோசங்களுக்கு இடையிலே இளைஞர்களின் எதிர் காலமும் ஒழிக என்பது மறைந்து இருக்கிறதோ என்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே சுழலுகின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் ஆங்கிலமே முதன்மை பேச்சு மொழியாக இருக்கிறது. திறமை இருந்தும், தாய்மொழி இருந்தும் ஊமை நிலைமை. சில இளைஞர்கள் தற்கொலை முடிவுக்கு கூட இது காரணமாகிறது. முதல்நாள் கல்லூரி காலடிகள் அன்று இரவே சோக வரலாற்று காலடிகளாக தடம் பதிக்கிறது.

இந்திய நாட்டின் சிறப்பும், குழப்பமும் ஒன்றே ஒன்றுதான் அது, பல மொழிகள். ஒரு நாட்டில் பல மொழி பேசும் மனிதர்கள் இருப்பார்கள். மாநில அளவிலே ஒரே மொழி பேசும் பல மாநிலமும், மனிதர்களும் இருப்பது இங்கேதானோ.

இளையர்களே! கொஞ்சம் விழிப்பாக இருங்கள்.

தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு என்றெல்லாம் முச்சுக்கு முன்னூறு தரம் சொல்லுவதெல்லாம் சரிதான். வாழ்க்கையில் தமிழ் மட்டுமே போதும் என்றால் யானை பசிக்கு சோளப்பொறி போல.

நானும் தமிழன் தான், தமிழச்சிக்கும், தமிழனுக்கும் பிறந்தவன்தான். உலகம் ஒன்றாகி வரும் போது நாம் மீண்டும் கூறு போட்டுக்கொண்டிருக்கலாகாது.

வாழ்க்கையில் வாழ ஆங்கிலம், தமிழ் தாயை நிந்திப்பதாக ஆகாது.

இல்லை என்றால் எங்கள் இளையர்களுக்கு ஆங்கிலம் அறவே கலவாத நல்ல தமிழ் அலுவலக வேலை கொடுத்து எங்கள் வறுமையை போக்கிவிட தயாராக இருங்கள். எங்கள் உயிரையும் காப்பாற்றுங்கள்.

மேற்கண்ட கருத்தை, யாரிடம் சேர்ப்பது? அரசிடமா? தமிழ் காவலர்களிடமா? தமிழ் மொழி வல்லுனர்களிடமா?

இன்றைய கல்லூரிகளுக்குச் சென்று இளைஞர்களோடு உரையாடிப் பாருங்கள் அவர்கள் இதைவிட தெளிவாக, நுணுக்கமாக தமிழிலே சொல்லுவார்கள்.

இளைஞர்களின் எதிர்காலத்துக்காக..

இந்த கடிதம் தவறு என்று ஒரு பின்னுட்டம் வந்தாலும் நான் அழித்து விட தயார்.
இத்தகைய ஒரு தவறுக்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

Read more...

Friday, April 4, 2008

Situational Heros

ஆர்ப்பரிக்கும் கடலும், சலசலக்கும் ஆறுகளும், நீரோடைகளும் இவர்களுக்கு மகிழ்வை தருவதே இல்லை. நிர்சலனமாக இருக்கும் ஏதேனும் ஒரு குளத்திலோ, அல்லது ஒரு ஏரியிலோ ஒவ்வொரு கல்லாகவோ, ஏதேனும் ஒரு குப்பை ஒன்றையோ ஏறிந்து தளும்பி வருவதையோ, கலங்கி எழுவதையோ கண்டு இவர்கள் சுகம் காணுவார்கள்.

அடுத்தவர்களின் துன்பத்தில் ஆனந்தம் காணும் இவர்கள், மனித சமுகத்தின் பெரும் அவலம். அன்பென்ற இயற்கையின் உன்னதத்தை உணராத பிறவிகள்.

ஒரு சிலருக்கு மனமும், மூளையும் அமைதியாக இருந்தால் பைத்தியம் பிடிப்பது போலிருக்கும். எனவே சில முரண் செயல்பாடுகளுக்காக தம் பிடிப்பது, தண்ணி அடிப்பது, பிறரை, தன்னை துன்புறுத்துவது முதலான எல்லா செயல்களும் செய்து தன்னை, பிறரை பரபரப்பாக வைத்துக்கொள்வர். தன்னிலை பற்றிய பயம், தன் மரியாதையை, கௌரவத்தை இழக்க நேருமோ என்றும் பதற்றம் அலைபாய இப்படித்தான் நம்ம கர்நாடக தலைவர்கள் போல, மக்கள் போல நடந்துகொள்வர்.

சந்தர்ப்பவாத கட்சிகள் கூடி சரியான ஆட்சி கூட அமைய அங்கே வாய்ப்பு இல்லா குழப்பமான சூழ்நிலை. நாம், நம்ம கர்நாடக மக்களுக்கு சரியான அரசு அமைய வாய்ப்பு இல்லாமல் போனதே என்று கவலை பட விழைகிறோம். ஆனால் அந்த தலைவர்கள் ஊரை இரண்டு படுத்தி கூத்தாட விரும்புகிறார்கள்.

இந்த தலைகள், தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசினால் கேளிகூத்தாகத்தான் இருக்கும்.

பரிதாபத்துக்குரியவர்கள் அங்கே வாழும் தமிழ் மக்கள் தான். தமிழக அரசும், மத்திய அரசும் விரைவான, முழுமையான முடிவை தர வேண்டும்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தை அவர்கள் ஏனோ அறிந்து கொள்ள மறுக்கிறார்கள். இங்கேயும் கன்னடர்கள் இருக்கிறார்களே. ஓ, அவர்களும் தமிழ்நாட்டுக்காரராகிவிட்டர்களோ?

இன்னொரு குழப்பம் விளையா நிலையில்... நிகழ்வை கையாள தமிழக அரசுக்கு கைகொடுப்போம்.

Read more...

Saturday, March 29, 2008

மேதாவித்தனம்

அனேகமாக, எல்லாருமே மிக அருமையாக வலை அமைத்து நன்றாகவே பதிவு போடுகிறார்கள். என்னை மாதிரி மேதாவித்தனமாகவும் பதிவு செய்கிறார்கள். இந்த குழந்தைக்கு இப்படி ஒரு எண்ணம் மேலிடுகிறதை குறித்தே மேற்கொண்டு பதிவு வேண்டுமா, வேண்டாமா என்ற யோசனையாலே பதிவிட தோன்றவில்லை.

சும்மா ஒரு ரவுண்டு வந்ததில், இங்கே கூட எல்லா வகையான அக்கிரமங்களும், ஆராதனைகளும், அரவணைப்புக்களும் நடந்தேறிய வண்ணமே இருக்கின்றன. நாம் வாழும் உலகத்தை போல. மன்னிக்கவும்... நம்ம ஊரு அண்டை அயலாரை போல.

இந்த ஆடு மந்தைகூட்டம் பழக்கம் எப்போதுதான் போகும்? நூலு பிடித்தது மாதிரி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானா?

பாமரத்தனமும், நக்கீரத்தனமும் மட்டுமே இங்கே போதும் என்று நினைக்கிறார்களோ தெரிய வில்லை. ஓஷோ சொன்னது மாதிரி நாமெல்லாம் பழைய கில்லாடிகள்தான் போலும். சாக்ரடீசை விஷம் கொடுத்து கொன்ற கூட்டம்.

எல்லோருக்குமே தான் செய்தது தவறு என்று புரிவது ஒவ்வொரு இழப்பின் போது மட்டுமே என்றாலும், திருந்தி என்ன பலன்?, திருந்தாததிலிருந்து என்ன பலன்? ஒரு தீவிரவாதி சாகும் தருவாயில் திருந்தும்போது அவன் மகன் முழுதீவிரவாதியாக மாறியிருப்பான் அந்த அப்பனின் ஆலோசனைகளால்.
இப்படித்தான் உலகமும் இருக்கிறது, வலை உலகமும் இருக்கிறது.

"ச்சே ,போங்கடா " என்று எதோ ஒரு திரைப்பட வசனம் ஞாபகம் வருகிறது.

எனக்கு ஒரு பின்னோட்டம் வரும் "நீ என்னத்தை தூக்கி நிறுத்த விளைந்தாய்?" என்று.

ஒரு மலரைப்போல மலரும் வலை பூ, வருமா? வரவிடுவர்களா?

எண்ணத்தை சொல்ல?

Read more...

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP