Situational Heros
ஆர்ப்பரிக்கும் கடலும், சலசலக்கும் ஆறுகளும், நீரோடைகளும் இவர்களுக்கு மகிழ்வை தருவதே இல்லை. நிர்சலனமாக இருக்கும் ஏதேனும் ஒரு குளத்திலோ, அல்லது ஒரு ஏரியிலோ ஒவ்வொரு கல்லாகவோ, ஏதேனும் ஒரு குப்பை ஒன்றையோ ஏறிந்து தளும்பி வருவதையோ, கலங்கி எழுவதையோ கண்டு இவர்கள் சுகம் காணுவார்கள்.
அடுத்தவர்களின் துன்பத்தில் ஆனந்தம் காணும் இவர்கள், மனித சமுகத்தின் பெரும் அவலம். அன்பென்ற இயற்கையின் உன்னதத்தை உணராத பிறவிகள்.
ஒரு சிலருக்கு மனமும், மூளையும் அமைதியாக இருந்தால் பைத்தியம் பிடிப்பது போலிருக்கும். எனவே சில முரண் செயல்பாடுகளுக்காக தம் பிடிப்பது, தண்ணி அடிப்பது, பிறரை, தன்னை துன்புறுத்துவது முதலான எல்லா செயல்களும் செய்து தன்னை, பிறரை பரபரப்பாக வைத்துக்கொள்வர். தன்னிலை பற்றிய பயம், தன் மரியாதையை, கௌரவத்தை இழக்க நேருமோ என்றும் பதற்றம் அலைபாய இப்படித்தான் நம்ம கர்நாடக தலைவர்கள் போல, மக்கள் போல நடந்துகொள்வர்.
சந்தர்ப்பவாத கட்சிகள் கூடி சரியான ஆட்சி கூட அமைய அங்கே வாய்ப்பு இல்லா குழப்பமான சூழ்நிலை. நாம், நம்ம கர்நாடக மக்களுக்கு சரியான அரசு அமைய வாய்ப்பு இல்லாமல் போனதே என்று கவலை பட விழைகிறோம். ஆனால் அந்த தலைவர்கள் ஊரை இரண்டு படுத்தி கூத்தாட விரும்புகிறார்கள்.
இந்த தலைகள், தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசினால் கேளிகூத்தாகத்தான் இருக்கும்.
பரிதாபத்துக்குரியவர்கள் அங்கே வாழும் தமிழ் மக்கள் தான். தமிழக அரசும், மத்திய அரசும் விரைவான, முழுமையான முடிவை தர வேண்டும்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தை அவர்கள் ஏனோ அறிந்து கொள்ள மறுக்கிறார்கள். இங்கேயும் கன்னடர்கள் இருக்கிறார்களே. ஓ, அவர்களும் தமிழ்நாட்டுக்காரராகிவிட்டர்களோ?
இன்னொரு குழப்பம் விளையா நிலையில்... நிகழ்வை கையாள தமிழக அரசுக்கு கைகொடுப்போம்.
0 comments:
Post a Comment