முன்று முகம்
திருநங்கைகள் முன்று விதங்களில் அவதரிக்கின்றனர்...
இயற்கையின் இயல்பான படைப்பாக்கம். உடல் வேறு மனம் வேறாக உருவாகும் திருநங்கைகள். பெண்கள் குறித்து அதிக ஆர்வமும், ஆசையும், கவர்ச்சியும் மனதில் வருவித்துக்கொண்டு அவர்களாகவே மாறதுடித்து தன்னையும், தன் நடவடிக்கைகளையும் பெண்களாகவே மாற்றிக்கொள்ளும் ஆண்கள். இவர்கள் இறுதியாக மருத்துவ ரீதியான மாற்றங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
அடுத்த நிலை மாற்றம், ஏற்படுத்தும் மனமாற்றம். பொதுவாக வரிசையாக ஆண்களை பெற்றெடுத்த அம்மாமார்கள் தனது கடைசி குழந்தைக்கு பெண்ணாக வருவித்து, சடை அலங்காரம் செய்து, பூ வைத்து, பெணஆடை உடுத்தி அழகுபார்க்கும் போது அந்த சிறுவனும் தன்னை பெண்ணாக நினைத்துகொள்ளும் மனநிலை. அதேபோல பெண்குழந்தைக்கு ஆணாக அலங்காரம் செய்து அழகுபார்த்தலும் இத்தகைய திருநங்கைக்கான நிலையினை தோற்றுவிக்கிறது எனலாம்.
இதெல்லாமா ? என்ன எது முட்டாள்தனம்? என கேட்டால் ...
மனிதனின் மனம் மிகப்பிரமாண்டமான, நுண்ணிய நுட்பம் கொண்டது.
புள்ளி வைத்தால் கோலம் போடும். ரோடும் போடும்.
உங்களின் சில பழக்க, வழக்கங்களை சிறிது ஆய்வு செய்து பாருங்களேன். யார் உங்களுக்கு சொல்லிகொடுத்தது? சொல்லிகொடுத்த எல்லாமே அப்படியே கடைபிடிக்கிறீர்களா? ஏன் அதை எல்லாம் இப்போது விட்டுவிட்டீர்கள்?
எப்போதும் சிறு துளிதான் பெரு வெள்ளமாகிறது.
திருநங்கைகளை பற்றிய பதிவுகள், சில நாட்களுக்குப் பிறகு...
0 comments:
Post a Comment