Lyric_ Lie Rig
கவியே வருக...
‘எல்லோரும் கணினி தட்றாங்க, நான் என்னாத்த உழவு செஞ்சு, நட்டு வைக்க’ ன்னு உழவன் நினைச்சா என்னாகும்னு நானும் நினைச்சேன்.
பேருந்தில் பயணித்து ரொம்ப நாளாயிற்று என்பதால் நேற்று ஒர் அரை மணி தூர பயணம், லேசான மழையும், உடல் நலமின்மையும் கூட காரணம். எந்த வீடாக இருந்தாலும், பிரேதமாகவோ, மாப்பிள்ளையாகவோ தன்னை பறைசாற்றிக் கொள்ளும், எப் எம் வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தது. நிறைய பேசும் நேயரை வெட்டுவதும், திணறுபவரை வம்பளப்பதும் ஒலி கடிவாளம் கையில் வைத்திருப்பவரின் பாணி. (அதாங்க Radio Jackie)
அதுல ஒரு பாட்டு, கேட்டேன் பாருங்க ... ஆகா, என்ன அருமையான வரிகள் ...
கோழி, கோழி ன்னு ஆரம்பித்து, அடுத்து வந்தது பாருங்க ...
"சைவ முத்தம் தந்தா, ஒத்துகிட மாட்டேன்; சாகசத்த காட்டு செத்து போக மாட்டேன் "
எப்படிங்க இப்படி? உடம்பெல்லாம் புல்லரிக்குதுங்க. ஒரு பக்கம் பெருமையாவும் இருக்கு. இந்த மாதிரி கவிகள் வாழும் போது நாமளும் வாழுறோமே.
இன்னும்...
0 comments:
Post a Comment